காத்தான்குடியில் மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று மாலை தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பசிலின் திடீர் இந்திய விஜயம்: அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு ரணில் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *