காடுகள் பாதுகாக்கப்படவேண்டும். எனினும் குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்
மேலும், குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர், வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அது தொடர்பில் கவனமான அனுகுமுறை தேவை என்று இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தை தமிழ் மக்கள் மேய்ச்சல் நிலம் என்று கூறுகின்ற நிலையில், முஸ்லிம் மக்கள் வயல் நிலம் என்று கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.