வவுனியா வடக்கின் வெடிவைத்தகுளம் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. எனினும், புதிதாக சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த பிரதேசத்தின் பெரியக்கட்டிக்குளம் பகுதியில் இருந்த கச்சல்சம்பளங்குளம் என்ற கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘சப்புல்தென்ன’ என்ற சிங்கள கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குகின்றபோது அது தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்காகவா வழங்கப்படுகிறது என்று இலங்கைக்கு உலக வங்கி உட்பட்ட உதவு நிறுவனங்களிடம் தாம் வினவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் குடியிருப்புகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது! சபையில் சித்தார்த்தன் கோரிக்கை