பிரதமர் பதவிக்கு ரணிலை நியமிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை!

கோட்டாபய அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் திட்டமும் அரசாங்கத்திடம் எதுவும் இல்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 ஜனவரியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அதற்குப் பதிலாக பசில் ராஜபக்ச அல்லது ரணில் விக்ரமசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பட்ட நிலையில் அதற்குப் பதிலளிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் ஏற்படாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த செய்தியை மறுத்திருந்தது.

தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவா நிதியுதவிகள்? சபையில் கஜேந்திரன் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *