திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து திருமலையில் விபத்து! 12 பேர் படுகாயம்