இலங்கை- போலந்து நாடுகளுக்கு இன்று முதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, போலந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை Lot Polish Airlines இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில் Lot Polish Airlines, திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் ஆடம் பரகூஸ்கிக்கும் இடையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான சேவைகளை நிறுத்தியிருந்த பல விமான சேவைகளும் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *