உலக மண் தினத்தை முன்னிட்டு, எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும், மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியிள் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு மாகாண கல்வி திணைக்கள மகாநாட்டு மண்டபத்தில் வேழினி பாலேந்திரா (பிரதி கல்வி பணிப்பாளர் விவசாயம்) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளரும், பிரதி மாகாணக்கல்விப்பணிப்பாளருமான ப. அருந்தவம் ஆசிரியர் ஆலோசகர் எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன். கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.


