‘ஒமிக்ரான்’ வைரஸ் மாறுபாடு மனிதரில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த மாறுபாடு ஏனைய நாடுகளிலும் வேகத்துடன் பரவி வருகிறது. இதனையடுத்து பல நாடுகளும் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந் நிலையில், உலக சுகாதார அமைப்பு, ‘ஒமிக்ரான்’ கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் கருத்துரைத்துள்ளார்
ஏனைய கொரோனா வகைகளை விட ‘ஒமிக்ரான்’ கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன. அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளன.
எனினும் ‘ஒமிக்ரான்’ குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்று உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.