நாடாளுமன்றுகளுள் மிளகாய் தூள் கும்பலை வைத்துக்கொண்டு நல்ல விடயங்களை நாட்டுக்கு செய்ய முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட உறுப்பினர்கள் சபையில் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
நாடளுமன்றில் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. ஆனால், வார்த்தை பிரயோகம் கடுமையாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் போனால், அடிதடி ஏற்படும்.
இதனை கட்டுப்படுத்தும் பொறுப்பு சபாநாயருக்கு உள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என அவர் எங்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் மிளகாய் தூள் வீசும் இந்தக் கும்பலுடன், மக்கள் மதிக்கும் வகையில் நாடாளுமன்றை நடத்த முடியாது.
உங்களால் சபையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இது தொடர்பில் உயர் நீதி மன்றம் செல்ல நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
‘ஒமிக்ரான்’ மாறுபாடு மனிதரில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது! உலக சுகாதார அமைப்பு