அரசாங்கம் செய்யும் ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்காமல் ஏன் ஒழிந்து திரிகிறீர்கள் என எதிர்க்கட்சியினர் சபையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ரணில் விக்கிரம சிங்க, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் குறித்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசாங்கம் எமக்கு தெரியாமல் பல ஒப்பந்தங்களை செய்கிறது. இரவிரவாக கூட ஒப்பந்தங்கள் இடம்பெறுகின்றன.
அவை தொடர்பான அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.
ஆறு வார காலம் கடந்த நிலையில், இதுவரையில் அறிக்கை சமர்பிக்கப்படவில்லை. நிதி அனுமதிகளை வழங்கும் இடமாக நாடாளுமன்றம் உள்ளது. ஆனால் இங்கு எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர்.