பிரதமர் மஹிந்த ராஜபச்சவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான வண. பிதா அருட்கலாநிதி எஸ். சந்ருபெர்னாண்டோவிற்கு, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செற்படும் சர்வதேச இசைக்கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை சுகஜீவ பேராலயத்தில் கடந்த 06.12.2021 திங்கட்கிழமை விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் வி.ஜி. பி. நிறுவனத்தின் உப தலைவரும் சுகஜீவிய பேராலயத்தின் தலைவருமான வி.ஜி.எஸ். காடினல் செல்வராஜின் அழைப்பில் சென்ற அருட்கலாநிதி வணபிதா எஸ். சந்ரு பெர்னாண்டோவிற்கு சிறப்பு விருதாக சாதனை சர்க்கரவர்த்தி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெருசலேம் வேதாகமப் பல்கலைக்கழகத்தின் நினைவுச்சின்னத்தை பணிப்பாளர் எபி நேசர் வழங்கிவைத்தார். எட்டோ மிசன் இந்தியா நினைவுச்சின்னத்தை பிஸப் இஸ்ரேல் ராஜப்பாவால் வழங்கிவைக்கப்பட்டது.


