வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து சீல் செய்யப்பட்ட (பயன்படுத்தப்படாத) LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே லிட்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.