கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 4ஆம் திகதிக்கு முன்னதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களாக நாட்டில் எரிவாயு சிலிண்டர்களும், எரிவாயு அடுப்புக்களும் வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சையாக இது மாறியிருந்தது.
சர்வதேச ஊடகங்களும் இந்த வெடிப்புச் சம்பவங்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டிருந்தன. எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்நிலையில், எரிவாயு நிறுவனங்கள் இது தொடர்பில் தற்போது சில மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இசைக்கல்விக்கான இலங்கைத்தூதுவருக்கான விருது வழங்கி கௌரவிப்பு!