
தமிழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு சேனை விடுக்கும் அறிவித்தல்!

குறிப்பாக கல்முனை மாநகரத்தில் ஆட்சியை வைத்திருக்கும் கல்முனை மாநகரசபையானது தொடர்ந்தும் தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி என்பவற்றை புறக்கணித்து வருவதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.தமிழ் மக்களின் அபிலாசையை இன நல்லிணக்க ரீதியில் தீர்வு காண முற்படாமல் இன ரீதியாக பிரிவினையாக செயல்படும் கட்சிக்கும் ஆட்சிக்கும் கல்முனை மாநகர சபையில் தமிழ் மக்களின் வாக்கினை பெற்று சென்ற எந்த மாநகர சபை உறுப்பினரும் இதற்கு ஆதரவு அளிக்க கூடாது என்பதோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்வுக்கு எதிராக இருக்கின்ற ஆட்சியை தோற்கடிக்க எதிராக வாக்களிக்க வேண்டும் எனும் அறிவித்தலை விடுக்கின்றோம்.மேலும் தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் செயல்பாட்டில் ஈடுபடும் மாநகரசபை உறுப்பினர்களை எமது பிரதேசம் சார்பான பொது நிகழ்வுகள் மற்றும் பிரதேச நலன் சார் விடயத்திலோ பிரதேச செயலக விடயத்திலோ தலையீடு செய்வதையும் எதிர்காலத்தில் தடுப்பதோடு தொடர்ந்தும் ஊர் சார்பில் மக்கள் சார்பில் மக்களின் மன நிலைப்பாடு அடிப்படையில் சேனை தீர்க்கமான முடிவினை அறிவிக்கும் என்பதோடு மக்களின் எண்ணத்தினையும் வெளிப்பாட்டையும் சேனை எதிர்காலத்தில் செயல்படுத்தும் என்பதையும் பகிரங்கமாக தெரிவிக்கின்றோம்.
ந. சங்கீத்
தலைவர்
தமிழ் இளைஞர் சேனை
கல்முனை பிராந்தியம்