ஹற்றன் – ரொசல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை மற்றும் அவர்களின் பிள்ளை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
ஹட்டன் ரொசல்ல ரயில்வே நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.