நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் நிலையம் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டணி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
