மட்டக்களப்பில் மே 18 ஆம் திகதி இறந்த உறவுகளை நினைவேந்திய 10 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வாழைச்சேனை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஸ் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில், இந்த வழக்கை வாதாடிய சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவிக்கையில்,
கடந்த 7 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்;.
இதில் கடந்த காலங்களில் எங்களோடு கைகோர்த்து நின்ற சிரேஸ்ட சட்டத்தரணிகள் ரட்ணவேல், ஜெயசிங்கம் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளான ரம்சீன், ரிவான் ஆகியோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
புhதிக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காக வடகிழக்கு எங்கும் நாங்கள் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
