பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- 7பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில் 7பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ ஹெலிகாப்டரில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 10க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள், இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து  விமானப்படை ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ”தமிழகத்தின் குன்னூர் அருகே சி.டி.எஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஐ.ஏ.எப் எம்-17வி5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *