சங்கானையில் 14 பவுண் திருட்டு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் 14 பவுண் நிறையுடைய நகை நேற்று திருடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று மு.ப 10 மணிக்கு கொண்டாட்டம் ஒன்றுக்கு சென்றுவிட்டடு மாலை 5 மணிக்கு வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது குறித்த நகை திருடப்பட்டுள்ளது. இது பற்றி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *