
தேசிய தலைவர் பிரபாகரன் போதைவஸ்து கடத்தியவர் என்று கூறிய வார்த்தைக்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் கண்டன பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைவஸ்து கடத்தியவர் என்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என்றும் கூறிய வார்த்தைக்கு எதிராக இன்று ஐக்கிய தேசிய கட்சியின் கரைச்சி பிரதேச சபையில் கறுப்பு கொடி காட்சிப்படுத்தி கண்டன பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தனர்.
குறித்த பிரேரணையில் பல கட்சி சார்ந்தவர்களும் ஆதரவளித்தனர். அமைச்சர் கூறிய அந்த வார்த்தைக்கு மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.