பிரியந்த குமார படுகொலை- பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்

பிரியந்த குமார தியவதன படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், (BASL)  பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் பாகிஸ்தான் பிரதமரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இலங்கையில் 21, 000 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பான BASL, விசாரணையின் முன்னேற்றத்தை அதன் முடிவு வரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், இலங்கை பிரஜை கொல்லப்பட்டதை உடனடியாகவும் கடுமையாகவும் கண்டித்ததற்காக பாகிஸ்தான் பிரதமரை BASL பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *