எரிவாயு மோசடியானது அரசாங்கத்தின் இயலாமையின் விளைவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சசுனட அருண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை உடபரகம புன்னயவர்தனராமஸ்த ஸ்ரீ கொமானந்த ஞாயிறு போதனை பாடசாலைக்கான கட்டிடத்தை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை உள்ளதா அல்லது பெரு நிறுவன சேவை அதிகார சபை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நுகர்வோரை பாதுகாக்க வேண்டிய நிறுவனம் நிறுவனங்களை பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அமைச்சர் நிறுவன சேவைகள் அமைச்சராக மாறி விட்டார்.
முழு அரசாங்கமும் கைகோர்த்து நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மைய நாட்களில் 458 இற்கும் அதிகமான எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
அவை சாதாரண குண்டுவெடிப்புகள் என்று, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறுவது நகைப்புக்குரியது என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வை, ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதான அமைப்பாளரும், திஸ்ஸமஹாராம இணை அமைப்பாளருமான, தென் மாகாண சபையின் முன்னால் எதிர்க்கட்சித் தலைவருமான தென்னகோன் நிலமே மற்றும் அம்பலாந்தோட்டை சூரியவெவ அமைப்பாளர் டி.வி.கே.காமினி மற்றும் லுனுகம்வெஹெர மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேச ஒருங்கிணைப்புச் செயலாளர் ரங்க ரன்ஹொட்டி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், திஸ்ஸமஹாராம பிரதம அமைப்பாளர் லால் சந்திரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.