சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினம், இன்று புதுக்குடியிருப்பு பெண்கள் தொழில்முயற்சி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தின நிகழ்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில், புதுக்குடியிருப்பு பெண்கள் தொழில்முயற்சி கூட்டுறவு சங்க மண்டபத்தில் மாதவிடாயை பேசுபொருளாகக் காெண்டு சுவரொட்டி , விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு மாண்புடன் கூடிய மாதவிடாய் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இளைஞர்கள், பெண் அமைப்பினர்கள், தொழில்துறை அரச உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு விழுது உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதல் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாண்புடன் கூடிய மாதவிடாய் தினம் அனுஷ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


