பிரியந்த படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து பாலாவி சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது

புத்தளம் – பாலாவி தனியார் உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 50 அதிகமான ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் 5 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *