
கல்முனை மாநகரசபையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களில் இருவரான சந்திரசேகரம் ராஜன், க. சிவலிங்கம் ஆகியோர் எதிர்த்து வாக்களித்ததுடன் ஏனையோர்கள் நடுநிலை வகித்துள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களான திரு.சந்திரன் ,திரு.செல்வா, திருமதி விஜயலட்சுமி ஆகியோர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.
ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 06 பேரும், நடுநிலையாக 05 பேரும், குறித்த வாக்கெடுப்பில் 07 பேர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
