கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், பொரளை கேம்பல் பார்க்கில் இயங்கும் ரேபிட் ஆன்டிஜென் தளத்தில் மக்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள முடியும் என்று கொழும்பு மாநகர சபையின் (CMC) பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் டினு குரேஜ் (Dinu Guruge) தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனை ஞாயிறுக்கிழமை தவிர தினமும் காலை 9.30 முதல் 11.30 வரை செயல்படும்.
கொரோனா ஒத்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், வேலைக்குச் செல்வதையோ அல்லது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதையோ தவிர்க்குமாறும் வைத்தியர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.