புத்தளத்தில் அரச ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கம் இன்று (08) நாடளாவிய ரீதியாக சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் புத்தளத்திலும் அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், புத்தளம் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், புத்தளம் வலயக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
அத்துடன், அரச திணைக்களங்களில் சில பகுதிகள் இயங்கியதுடன், பல பகுதிகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன.
இதனால் தமது தேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்கள் பலர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் திரும்பிச் சென்றமையை அவதனிக்க முடிந்தது.
இதேவேளை, 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.