பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவுக்கு நீதி கோரி புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர் நிமால் ஏக்கநாயக்க போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்.
குறித்த போராட்டம், இன்று புதன்கிழமை மதுரங்குளி நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கை பிரஜையான பிரியந்த குமார கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.
அத்துடன், பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொறியியலாளரான பிரியந்த குமாரவுக்கு நீதி நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் துசார பத்திரகே உள்ளிட்ட தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.