வவுனியாவில் ஒரே இரவில் 5 கடைகளில் பணம் திருட்டு!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் (நேற்றுமுன்தினம்) திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம்வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் கூரைத்தகடு மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழைந்து, பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை கடைகளை திறக்கச் சென்றிருந்த உரிமையாளர்கள் திருட்டு இடம்பெற்றுள்ளதனை அவதானித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். குறித்த கடைகளிலிருந்து பல இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *