
நாடு முழுவதுமுள்ள அரச தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமும் ஆதரவு வழங்கியுள்ளது.
குறித்த சங்கம் அனுப்பிய செய்திக் குறிப்பில்,நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்கி போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.