மன்னாரில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிணவறையில் ஒப்படைக்கப்பட்டிருந்த 59 வயதுடைய எஸ்.ஆனந்த லெட்சுமி கமலிற்ரா என்பவரது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போதேஇ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.