யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று புதன்கிழமை 123 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதன்போதே, இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படிஇ சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 32, 39, 59, 83 வயதுடைய பெண்கள் நால்வரும்,
யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வயது சிறுமி மற்றும் 28 வயது பெண் ஆகியோரும்,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 59 வயது ஆண், 60 வயது பெண் இருவரும்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 27 வயது பெண் ஒருவரும்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.