ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது.
இந்நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய ரீதியிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு நிகழ்வாக ஐக்கிய பெண்கள் சக்தியினால், ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன், ஐக்கிய பெண்கள் சக்தி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர கலந்து கொண்டதோடு, உப தலைவராக உமாச்சந்திரா பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..