வட்டுக்கோட்டை – குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் பாரதியாரின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, எதிர்வரும் 11.12.2021 திகதியன்று காலை பத்து மணியளவில் நடைபெறவுள்ளது.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமை தாங்குகின்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இந்தியத் துணைத்தூதர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ், மறவன்புலவு சச்சிதானந்தம், வண மீஹ சந்துர விமல தேரர் மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரேமினி பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.