இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் இன்று(08) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது சிறுபான்மையினராக இலங்கை இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறைற்றுவதில் உள்ள சவால்கள் , சமகாலத்தில் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


