ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி!

ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வரியர்ஸ் அணியை டக்வர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி வரியர்ஸ் அணி முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜப்னா கிங்ஸ் அணி 3 ஆவது ஓவரில் விளையாடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அணிக்கு தலா 14 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டு மீளவும் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது ஜப்னா கிங்ஸ் அணி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்தது.

<span;>ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுபக்கத்தில் ஓட்ட சராசரியைச் சரியவிடாது துடுப்பெடுத்தாடிய அவிஸ்க பெர்னான்டோ 23 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்களோடு 53 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித்தலைவர் திசர பெரேராவும் தன் பங்குக்கு 6 ஆறுகள், 2 நான்குகள் உள்ளடங்கலாக 21 பந்துகளில் 53 ஓட்டங்களைச் சேர்க்க, ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைக் குவித்தது.

கண்டி அணியின் சிராஸ் அஹ்மட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய கண்டி வரியர்ஸ் அணி, ஒரு கட்டத்தில் 1, ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று கடும் சவாலை ஏற்படுத்தியது.

ஆயினும் ஐப்னா கிங்ஸ் அணியின் சுரங்க லக்மால், ஜெய்டன் சீல்ஸ் இருவரதும் சிறப்பான இறுதி ஓவர்கள் பந்துவீச்சினால், அவர்களால் 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களையே பெற முடிய, ஜப்னா கிங்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணியின் சுரங்க லக்மால் தெரிவானார்.

3 போட்டிகளில் விளையாடியுள்ள ஜப்னா கிங்ஸ் அணி, 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *