நல்லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியார் சிலை அகற்றப்பட்டு புதிய சிலை வைப்பதற்கு மாநகர சபையால் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய சிலை பாரதியாரின் சொந்த ஊரான எட்டியபுரத்தைச் சேர்ந்த புருசோத்மன் என்பவரால் இலவசமாக வடிவமைத்து வழங்கிய சிலை தற்போது மாநகர சபை நிர்வாகத்தால் ஏற்றிவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சிலையில் சில சேதங்கள் ஏற்பட தொடர்ந்தும் திருத்தம் செய்யப்படுவதனால் இந்திய தூதரகத்தின் விருப்பத்தின் பெயரில் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், புதிய சிலை செய்வதற்கோ அல்லது அதனை வைப்பதற்கான எந்த அனுமதியோ அல்லது குறைந்த பட்சம் தகவலோ மாநகர சபைக்கு வழங்கப்படவில்லை என்ற நிலையில் இது தொடர்பான மேலதிக விபரம் ஏதும் சபை அறிந்திருக்கவில்லை.
தற்போது வைக்கப்பட்டுள்ள சிலை 1976ஆம் ஆண்டு அந்த இடத்தில் வைக்கப்பட்டது. இதேநேரம் எதிர்வரும் 11ஆம் திகதி சுப்பிரமணியபாரதியாரின் பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
