
பைஸர் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக Pfizer-BioNTech நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வக ஆய்வுகளின் தரவுகளின் படி, புதிய மாறுபாடு முந்தைய விகாரங்களைக் காட்டிலும் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளால் வழங்கப்பட்ட நோயெதிர்ப்பு பாதுகாப்பைத் தவிர்ப்பதில் மிகவும் திறமையானது என்பதை உறுதிப்படுத்துகின்றது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் ஆரம்ப இரண்டு டோஸ் தடுப்பூசிகள் தொற்றுநோயைத் தடுக்க போதுமானதாக இருக்காது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
