நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகிய கார் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

