திருகோணமலை, கிண்ணியா – மஜீத் நகர் வெல்லாங்குள சோளச் செய்கையாளர்கள் இம் முறை விளைச்சலின்றி நட்டம் அடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
பசளை தட்டுப்பாடு காரணமாக சோளச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரம் சோளச் செய்கையை நம்பியே உள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல இலட்சம் ரூபா முதல் செய்து செய்கையில் ஈடுபட்டபோதும் உரிய பயன் கிடைக்கவில்லை.
ஒரு கிலோ சோள விதையின் விலை 1,700 ருபாவாகும். பல ஏக்கரில் இச் செய்கையை மேற்கொண்ட போதும் விளைச்சல் கிட்டவில்லை.
மனைவி, பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டபோதும் இந்த முறை பசளை இன்மையால் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளோம்.
எனவே, தங்களுக்கான நட்டஈட்டை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும் என சோளச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.