இரவு நேரம் வீட்டிற்குள் புகுந்து மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட கணவனை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும், 10ஆயிரம் ரூபாய் பணப் பிணையிலும நீதிவான் விடுவித்துள்ளார்.
அனுராதபுரம் – இராஜாங்கனை பகுதியை சேர்ந்த குறித்த நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவி வேறு நபருடன் தகாத உறவை பேணி வந்துள்ளார். அதனை அறிந்த குறித்த நபர், இரவு வேளை வீட்டுக்குள் புகுந்து மனைவி மீதும், மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி விட்டு இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
குறித்த நபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும், அனுராதபுரம் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளி சரணடைந்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்து தம்புத்தேகம நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவர் சார்பில் வாதாடிய சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்திருந்தார். அதனை அடுத்து அவரை பிணையில் நீதிவான் விடுவித்தார்.