வவுனியா வெடுக்குநாரி மலையின் பௌத்த சின்னங்கள் தமிழர்களுடையது! சபையில் சார்ள்ஸ் தெரிவிப்பு

தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள். எனவே தமிழ் பௌத்தர்களின் அடையாளங்களே வடக்குகிழக்கில் பௌத்த அடையாளங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வவுனியா வெடுக்குநாரி மலையில் நிறுத்தப்பட்டுள்ள பூசைகளை மீண்டும் நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய தேசிய மரபுரிமைகள் துறை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,

இலங்கையில் தமிழ் சிங்கள் முஸ்லிம்களின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனினும், வெடுக்குநாரி மலை விடயம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தீர்ப்பு வரும் வரை பொறுமைக் காக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள கடற்படையின் முன்னாள் தளபதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *