மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்திருந்த தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீசாலையை சேர்ந்த 36 வயதுடைய க.சுதாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ். புத்தூர் சந்தியில் கடந்த 28ஆம் திகதி இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிக்ச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
வவுனியா வெடுக்குநாரி மலையின் பௌத்த சின்னங்கள் தமிழர்களுடையது! சபையில் சார்ள்ஸ் தெரிவிப்பு