மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நீங்கள் பறித்துக்கொண்டு எப்படி ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியை உருவாக்கினீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் இன்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பறித்து விட்டு அனைத்தையும் மத்தியில் வைத்துளீர்கள்.
இந்நிலையில், சட்டங்கள் நாடு முழுவதும் பரவலாக்கல் இல்லாத போது எப்படி ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறுவீர்கள்.
தமிழர்கள் இல்லாத செயலணியை உருவாக்கி பின்னர் அதற்கு முஸ்லிம் சமூகங்களை இணைத்துள்ளீர்கள்.
பின்னர் தமிழர் பிரதிநிதிகளை வற்புறுத்தலின் பின்னர் இணைத்துள்ளீர்கள். இது ஏன் என்று எமக்கு தெரியும்.
காலப்போக்கில் அவர்களும் உங்களின் விளையாட்டில் சேர்ந்து செயற்படும் நிலை ஏற்படலாம். ஆகவே நீங்களாகவே பதவி விலகுவது நல்லது என தெரிவித்துள்ளார்,