
மட்டக்களப்பு மாவட்டத்தில், உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைதுசெய்யப்பட்ட 10 பேரும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர் என்றுகுற்றம்சாட்டி மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை போலிஸார் கைதுசெய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதை எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது என அவர்கள் சார்பில் மன்றில் முற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்தநிலையில், மன்று அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.
குறித்த 10 பேர் சார்பிலும், தன்னுடன் மூத்த சட்டத்தரணி ரட்ணவேல், மற்றும் சட்டத்தரணிகளான ஜெசிங்கம், ரம்சி, றிப்கான் ஆகியோரும் பங்களித்திருந்தனர் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்தார்.