பிாியந்த கொலை சம்பவம்- வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு!

இலங்கையரான பிரியந்த குமார தியவடன பயங்கரவாத கும்பலினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு கணக்காளர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கி வரும் பாகிஸ்தான தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்கு, வெளிநாட்டு கணக்காளர்கள் அங்கு  வருவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானிலுள்ள சில நிறுவனங்களில், இலங்கையை சேர்ந்த கணக்காய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  இலங்கை கணக்காளர் பிரியந்த கொல்லப்பட்டமையினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பாகிஸ்தான்– சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து, எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பிரதான சந்தேகநபர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *