2021 ஆம் ஆண்டு க.பொ.த சா/த பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் தனியார் கல்வி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்று நோயால் கீழ் நிலை வகுப்புகளில் உள்ளவர்கள் தனியார் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
O\L மற்றும் A\L மாணவர்களுக்கு பொதுத் தேர்வு திகதிகள் நெருங்கி வருவதால், சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
இதனால் மாத்திரமே தனியார் கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.