கொரோனாத் தொற்றால் பெற்றோரை இழந்த 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டம் ‘இடுகாமா’, கொரோனாச் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.
தாய் அல்லது தந்தையின் இறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல், மாணவரின் பிறப்புச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல், இறப்பு நிகழ்ந்த கிராம அலுவலர் பிரிவு கிராம நிர்வாக அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் மாணவர் படிக்கும் பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதம் என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை செயலாளர், கொரோனாச் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.