
தொல்புரம் மத்தி பகுதியில், சிறுவன் மீது கல் வீழ்ந்ததால், காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கஜிதரன் (வயது – 11) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த வீட்டில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு விளையாடிக் கொண்டிருந்தவேளை, சிறுவன் மீது கல் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாகவே அந்தச் சிறுவனை மீட்டு மூளாய் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதும் அங்கு சேர்ப்பதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்பது பரிசோதனையில் தெரியவந்தது.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.