ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 63 பேரையும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த 63 பேர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக கலந்துக்கொண்டவர்கள் மற்றும், தாக்குதல் தாரிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 69 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.